
டார்வின் மார்ச் 18
ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவையை தொடங்கவிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் வடக்கு நிலப்பகுதியின் தலைநகரான டார்வினுக்கு எதிர் வரும் 27 ஜூன் 2025-ல் ஏர் ஆசியா விமான சேவையை தொடங்குகிறது.
இந்த நகருக்கு வாரத்திற்கு 4 விமான சேவைகளை மேற்கொள்ள ஏர் ஆசியா திட்டமிட்டுள்ளது.
டார்வின் நகரம் திகைப்பூட்டும் நிலப்பரப்பு, சிலிர்ப்பூட்டும் சாகசங்கள் மற்றும் இயற்கை அழகுக்கு ஒரு நுழைவாயலாகும்.
இந்த நகரில் சூரியன் உதிப்பதை கண்டு ரசிக்கும் அழகிய மின்டில் கடற்கரை, வனவிலங்குகளின் அழகிய நடமாட்டம் மற்றும் யுனேஸ்கா பாரம்பரிய பட்டியல் இடம்பெற்றுள்ள காகாடு தேசிய பூங்கா இவை அனைத்தும் சுற்று பயணிகளை அதிகம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆஸ்திரேலியா சந்தையில் ஏர் ஆசியா மலேசியா தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வருகிறது.2024 மார்ச் மாதம் முதல் கோலாலம்பூர் மற்றும் பெர்த் நகருக்கு இடையே விமான சேவையை தொடங்கியது.

பெர்த நகருக்கான தேவை அதிகரிப்பால் அந்த நகருக்கு விமான சேவையை மேற்கொண்டு வரும் துணை நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸை ஆதரிக்கும் வகையில் ஏர் ஆசியா மலேசியா இந்த விமான சேவையை தொடங்கியது.
ஏர் ஆசியா குழுமம்(மலேசியா & இந்தோனேசியா) பெர்த் மற்றும் கெய்ன்ஸில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே வேளையில் ஏர் ஆசியா எக்ஸ் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி மற்றும் பெர்த் நகர்களுக்கு விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நான்கு நகரங்களுக்கு ஏர் ஆசியா சிறகடித்து வருகிறது.டார்வின் ஐந்தாவது நகரமாகும்.
கடந்த ஆண்டில் மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 600,000 பயணிகளை இந்த விமான நிறுவனம் கொண்டு சென்றுள்ளது.
இதனிடையே டார்வினுக்கு ஏர் ஆசியா மீண்டும் விமான சேவை மேற்கொள்வதை தாங்கள் வரவேற்பதாக ஆஸ்திரேலியா வர்த்தக மற்றும் ஆசிய தொடர்புகளுக்கான அமைச்சர் ரோபின் காஹில் ஒஹம் கூறினார்.
இந்த வடக்கு நிலப் பகுதியில் முதலீடு செய்ய, சுற்றிப் பார்க்க மற்றும் வர்த்தகம் செய்ய இந்த புதிய விமான சேவை துணை புரியும் என அவர் சொன்னார்.
உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமாக ஏர் ஆசியா விளங்குவதால், டார்வினுக்கான விமான சேவை, அதன் எதிர்கால பொருளாதாரம் வளர்ச்சிக்கு ஒரு அஸ்திவாரம் என்றார் அவர்.
இந்த வடக்கு நிலப்பகுதிக்கு விமான போக்குவரத்து சேவை மிக மிக அவசியம் என அவர் சொன்னார்.

டார்வின் வர்த்தகம் செய்ய அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த நகர் வர்த்தக வாய்ப்புக்கு சிறந்த இடம் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே டார்வினுக்கு முதல் விமான சேவையை தொடங்குவது தாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைவதாக மலேசியா ஏர் ஆசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
ஆஸ்திரேலியாவில் துடிப்பான ஒரு நகரமான டார்வின், வர்த்தக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பொருத்தமான இடமென அவர் தெரிவித்தார்.
ஆசியாவுக்கு இது ஒரு புதிய நுழைவாயில்.இந்நகரம் பல சிறப்பு அம்சங்களை கொண்ட ஒரு நகரமாகும் என அவர் தெரிவித்தார்.
தாய்லாந்து, இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், சீனா, கம்போடியா, தென்கொரியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் டார்வினுக்கு எளிதில் செல்ல இயலும் என அவர் தெரிவித்தார்.
இந்த புதிய விமான சேவை இங்குள்ள சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறையை மேலும் வலுப்பெற செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த மைல்கல் நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் கோலாலம்பூர் மற்றும் டார்வினுக்கு இடையே அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 299-லிருந்து தொடங்குகிறது.
டார்வின் மற்றும் கோலாலம்பூரிலிருந்து அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் AUD 189- லிருந்து தொடங்குகிறது.
இப்பொழுது முதல் 30 மார்ச் 2025-க்குள் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.


