
செம்ரோங் மார்ச் 18
ஜொகூர்,செம்ரோங் மஇகா தொகுதியின் மகளிர் அணி அனைத்துலக மகளிர் தின கொண்டாட்டத்தை வெகு சிறப்பாக நடத்தியது.
இந்த கொண்டாட்டம் லாபிஸ் சன்ரைஸ் பண்ணை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்திற்கு தேசிய மஇகா மகளிர் அணி தலைவியும் கெமெலா சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி தலைமையேற்றார்.
நாட்டின் வளர்ச்சிக்கு மகளிர் பங்கு மற்றும் அற்பணிப்பு குறித்து தமது உரையில் அவர் வலியுறுத்தினார்.

இந்த நவீன உலகத்தில் மகளிர் அனைத்து துறைகளிலும் வெற்றி நடை போடுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் மகளிர் அர்ப்பணிப்பை நாட்டு மக்கள் மறந்து விடக்கூடாது ஏன் அவர் நினைவுறுத்தினார்.
குறிப்பாக இந்திய பெண்மணிகள் நாட்டில் முக்கிய பொறுப்புகளில் பதிவு வகித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


