
தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சின் ஜொகூர் மாநில அளவில் நோன்பு கஞ்சி சமையல் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நோன்பு கஞ்சி சமையல் நிகழ்வுக்கு ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராவின் குமார் சிறப்பு வருகை புரிந்தார்.
இந்த நிகழ்வு கோத்தா திங்கியில் உள்ள கம்போங் மாக்கான் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் நோன்பு கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
அதே வேளையில் இந்த நிகழ்வில் வசதி குறைந்த 50 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜொகூர் லாமா சட்டமன்ற உறுப்பினர் நூருல் அக்மாலினா உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கெராக் ரஹ்மா திட்டத்தின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு நாடு தழுவிய நிலையில் இந்த நோன்பு கஞ்சி சமையல் நிகழ்வை நடத்தி வருகிறது.


