
சிரம்பான் ஜெயா மார்ச் 16
நோன்பு மாத கொண்டாட்டத்தையொட்டி அரசு இலக்கா பணியாளர்களுக்கு மடானி அரசாங்க சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் பேரிச்சம் பழங்களை வழங்கினார்.
தமது சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியில் உள்ள ராஹாங் போலீஸ் நிலையம,ராஹாங் தீயணைப்பு நிலையம், மலேசிய சுங்கத் துறை இலாகா, குடி நுழைவு இலாக்கா, செனாவாங் தீயணைப்பு நிலையம் மற்றும் செனாவாங் போலீஸ் நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்களுக்கு பேரிச்சம் பழங்களை அவர் வழங்கினார்.

இந்த முன்னிலை பணியாளர்களின் கடமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாக குணா கூறினார்.
மேலும் பொது மக்களுடன் இவர்கள் அணுக்கமான தொடர்பை வைத்துக் கொள்வதில் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் வசதி குறைந்த மக்களின் நலன்களில் அதிக அக்கறை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த புனித நோன்பு மாதத்தில் தமது சட்டமன்ற அலுவலகம் வசதி குறைந்த மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்


