Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சுபாங் விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமான சேவைகளை மேற்கொள்ள பாத்தேக் ஏர் திட்டம்!

சுபாங் மார்ச் 14
அரசாங்கத்தின் விஸ்தரிப்பு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சுபாங் விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமான சேவைகளை மேற்கொள்ள பாத்தேக் ஏர் திட்டம் கொண்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் சுபாங் விமான நிலையத்திலிருந்து புதிய நகர்களுக்கு பாத்தேக் ஏர் சிறகடிக்கவிருக்கிறது.
இப்பிராந்தியத்தில் ஒரு முன்னணி விமான தளமாக சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தை உருமாற்றம் செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு துணை நிற்பதோடு, இதன் வெற்றிக்கு பாத்தேக் முழுமையான ஆதரவை வழங்க உறுதி கொண்டுள்ளது.
சுபாங் விமான நிலையத்திலிருந்து வர்த்தக மற்றும் சுற்றுப்பயணிகளுக்கு போதுமான விமான போக்குவரத்து வசதிகளை வழங்க பாத்தேக் ஏர் இலக்கை கொண்டுள்ளது.
ஆகஸ்டு 2024-ல் சுபாங் விமான நிலையத்தில் அனைத்துலக பயணிகளின் வருகை 25 விழுக்காடு அதிகரிப்பு கண்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் 105,000 அனைத்துலக பயணிகள் இந்த விமான நிலையத்தில் வந்தடைந்துள்ளனர்.
இதனிடையே அரசாங்கத்தில் இந்த விஸ்தரிப்பு திட்டத்திற்கு பாத்தேக் ஏர் முழுமையான ஆதரவை வழங்கும் என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
ஒரு நவீன நகர விமான நிலையமாக உருவெடுக்க சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் மிகவும் பொருத்தமான ஒன்று என்றார் அவர்.
இந்த உருமாற்றத்திற்கு பாத்தேக் ஏர் துணை நிற்பதோடு முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் தெரிவித்தார்.


குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு சௌகரியமான விமான போக்குவரத்து சேவைகளை பாத்தேக் ஏர் வழங்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த உருமாற்றத் திட்டத்திற்கு விமான நிறுவனங்கள், மலேசிய விமான போக்குவரத்து கழகம், மலேசிய விமான போக்குவரத்து ஆணையம் , மலேசியா ஏர்போர்ட் பெர்ஹாட் உட்பட அனைத்து தரப்பினரிடம் விருந்து முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் சொன்னார்.
இந்த இலக்கை அடைய அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க பாத்தேக் ஏர் தாயார் என அவர் தெரிவித்தார்.
மக்களின் விமான போக்குவரத்து வசதிக்கு சுபாங் விமான நிலையம் முக்கிய பங்காற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular