
செப்பாங் மார்ச் 13
பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரான கராச்சிக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவையை மேற்கொள்ளவருகிறது.
ஏர் ஆசியாவின் கராச்சி நகருக்கான நேரடி விமான சேவை எதிர் வரும் 30 மே 2025-ல் தொடங்குகிறது.
கராச்சிக்கு வாரத்திற்கு 4 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொள்ளவிருக்கிறது.
ஏர் ஆசியாவின் அனைத்துலக விமான சேவை விரிவாக்கத்தில், இந்த புதிய விமான சேவை மற்றும் மைல்களாகும்.
குறைந்த கட்டணத்தில் கராச்சி நகருக்கு சிறகடிக்கும் முதல் மலிவு கட்டண விமான நிறுவனம் ஏர் ஆசியா தான்.
இந்த புதிய விமான சேவையின் மூலம் மலேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக பயணிகள் எளிதாக கராச்சி நகருக்கு சிறகடிக்க முடியும்.
அதே போல் மலேசியாவை சுற்றி பார்க்க விரும்பும் பாகிஸ்தானிய பிரஜைகள் எளிதில் இந்நாட்டிற்கு வருகை புரிய முடியும்.

இந்த புதிய விமான சேவையின் மூலம் பாகிஸ்தானிய சுற்றுப்பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆசிய நகர்களுக்கு எளிதாக சிறகடிக்க முடியும்.
இதனிடையே 2024 ஆம் ஆண்டில் ஏர் ஆசியா வலிமையான அடித்தளத்தை அமைத்துள்ளதாக ஏர் ஆசியா எக்ஸின் தலைமை செயல்முறை அதிகாரி பென்ஜியாமின் இஸ்மாயில் கூறினார்.
இந்த புதிய விமான சேவையின் மூலம் தென் ஆசியா சந்தையில் ஏர் ஆசியா எக்ஸ் வலிமையாக கால் பதித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கராச்சி ஒரு துடிப்பான மற்றும் சக்தி வாய்ந்த புதிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடு நடை போட்டு வரும் ஒரு முக்கிய நகரமாகும் என அவர் சொன்னார்.
கோலாலம்பூர்-கராச்சி நேரடி விமான சேவையின் மூலம் பாகிஸ்தான் சுற்றுப்பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆஸ்திரேலியா, சீனா, தாய்லாந்து உட்பட இதர நாடுகளுக்கு எளிதில் தங்களின் பயணத்தை தொடர முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த புதிய விமான சேவையால் மலேசியா மற்றும் பாகிஸ்தான் வர்த்தகம், சுற்றுலா மற்றும் யாத்திரிக துறைகளில் துரித வளர்ச்சி அடைய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை என அவர் சொன்னார்.
இந்த புதிய விமான சேவையில் ஏர் ஆசியா எக்ஸ் ஆண்டொன்றுக்கு சுமார் 100,000 பயணிகளை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டில் 30 மில்லியன் சுற்றுப்பயணிகளை தெரிவிக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய இந்த புதிய விமான சேவை துணை புரியும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் கோலாலம்பூரிலிருந்து கராச்சி நகருக்கு அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம் வெ 959 மற்றும் கராச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம் PKR 64,990 வழங்கப்படுகிறது.
பயணிகள் AirAsia MOVE மற்றும் airasia.com செயலிகளின் வழி டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.
அரேபிய கடலின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள காராச்சி நகர் இயற்கை அழகை கொண்ட ஒரு அற்புதமான நகராகும்.
இந்த நகரில் பல சிறப்பம்சங்கள் சுற்றுப்பயணிகளை அதிகமாக கவரும் என்பதில் சந்தேகமில்லை.


