
ஜொகூர் பாரு மார்ச் 13
சுல்தானா ரோகாயா அறக்கட்டளை பல்வேறு உதவிகளுக்காக 35 விண்ணப்பதாரர்களுக்கு வெ 137.128 உதவி தொகையை வழங்கியது.
சமூக நலன், கல்வி, தொழில் முனைவு மற்றும் அரசு சார்பற்ற நடவடிக்கைகளுக்காக இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்த உதவி தொகை காண காசோலைகளை சுல்தானா ரோகாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாரன் மற்றும் ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராவின் குமார் வழங்கினர்.

ஜொகூர் மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு இந்த உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் என டத்தோ சுகுமாரன் கூறினார்.
இந்த த் திட்டங்களுக்கு ஜொகூர் மாநில மஇகா தலைவருமான ரவீன் குமார் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.


