Sunday, September 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நெகிரி செம்பிலான் தேர்தலில் பல்லின ஒற்றுமைக்கு வாக்காளர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்!

கோலாலம்பூர் ஜூலை 30
நாளை மறுநாள் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பல்லின மக்களுக்களின் ஒற்றுமையின் அவசியத்தை கருத்தில் கொண்டு அம்மாநில வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு வலியுறுத்தினார்.
இந்த மாநிலத்தில் மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் ஓராங் அஸ்லி பழங்குடியினர் சகோதரத்துவ உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர் என்றார் அவர்.
ஆனால் இந்த தேர்தலில் பாஸ் கட்சி தேசிய முன்னணியுடன் கைகோர்த்துள்ளதால் இனவாதம் தலை தூக்கி உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் தேர்தல் பிரச்சாரங்களில் குறிப்பாக சானுசி போன்ற பாஸ் கட்சியின் தலைவர்கள் சீன மட்டும் இந்திய சமூகத்தை இழிவாக பேசி வருகின்றனர்.
இதுபோன்ற இனவாத தலைவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ள தேசிய முன்னணிக்கு வாக்களித்தால் இந்நாட்டு இந்திய சமூகத்தின் நிலைமை என்னவாகும் என்பதை இந்த தேர்தலில் இந்திய வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நடப்பு பராமரிப்பு அரசாங்கம் அனைத்து இனங்களையும் அரவணைத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹமிருடின் ஹருன் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தை கைவிடவில்லை. அவர்களின் கரத்தைப் பிடித்து உச்ச நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த அரசாங்கத்தில் இனவாதத்திற்கு இடமே இல்லை.சானுசி போன்ற புல்லுருவிகள் இந்த மாநிலத்தில் நுழைய நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
ஒற்றுமையே நமது பலம் என்ற தார்மீக மந்திரத்தை கருத்தில் கொண்டு ஒற்றுமைக்கே நெகிரி செம்பிலான் மாநில இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ அழகேசு கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular