Sunday, April 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து இருக்கைகளுக்கும் 20 % கழிவு கட்டணங்களை ஏர் ஆசியா வழங்குகிறது!

செப்பாங் மார்ச் 10
தனது அனைத்து இருக்கைகளுக்கும் 20 விழுக்காடு கழிவு கட்டணங்களை உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா வழங்குகிறது.
உள்நாட்டில் உள்ள ஜொகூர் பாரு, பினாங்கு, மீரி, கோத்தா கினபாலு உட்பட உள்நாட்டில் உள்ள இன்னும் பல நகர்களுக்கு பயணிக்கும் பயணிகள் இந்த 20 விழுக்காடு கழிவு சலுகையை பெறலாம்.
அனைத்துலக நகரங்களான சிங்கப்பூர், டாலாட், பெய்ஜிங்,கவோசியுங்,சாங்ஷா,பெர்த், ஜெய்ப்பூர்,நைரோபி,சியோல்,அல்மாட் ஆகிய நகரங்களுக்கு பயணிகள் இந்த 20 விழுக்காடு கழிவு கட்டணத்தில் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளலாம்.


கோலாலம்பூரிலிருந்து இந்த நகரங்களுக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணமான வெ 75-லிருந்து தொடங்குகிறது.
இந்த கழிவு கட்டண கொள்முதலின் போது பயணிகள் தங்களுக்கு சொகுசான இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
24 மார்ச் மற்றும் 30 நவம்பர் 2025-க்குள் பயணம் செய்ய இப்பொழுது முதல் 16 மார்ச் 2025 வரை பயணிகள் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை airasia.com அல்லது AirAsia MOVE செயலியின் வழி பதிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமான சேவைகளுக்கு இந்த 20 விழுக்காடு கட்டணங்கள் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு நகரங்களுக்கு வெ 46 மற்றும் அனைத்துலக நகரங்களுக்கு வெ 75-லிருந்து தொடங்குகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular