Sunday, April 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது!

புத்ரா ஜெயா மார்ச் 11
நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
அண்மைய காலமாக அதிகரித்து வரும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளை கையாள தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.


நேற்று 2025 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் ஒருமைப்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாம் அல்லாத ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன் தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சருடன் நடத்தப்பட்ட சந்திப்பில் அவர் பேசினார்.
பல்வேறு திட்டங்களின் வழி மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பல இனங்கள் வாழும் இந்நாட்டில் தேசிய ஒற்றுமை மிக அவசியம் என்பதை இந்த கூட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் வலியுறுத்தியதாக அவர் சொன்னார்.
பல இனங்கள் அமைதியுடன் வாழும் இந்நாட்டில் தேசிய ஒற்றுமை மிக மிக அவசியம் என செனட்டர் சரஸ்வதி தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular