Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஹாரி ராயாவிற்கு சபா, சரவாக்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை பாத்தேக் ஏர் வழங்குகிறது!

சுபாங் மார்ச் 9
எதிர் வரும் ஹாரி ராயா கொண்டாட்டத்திற்கு சபா மற்றும் சரவாக் சொல்லும் பயணிகளுக்கு பாத்தேக் ஏர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்தார்.
இந்த வகையில் சரவாக்கிற்கு அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம் வெ 319 மற்றும் சபாவிற்கு அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம் வெ 379 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று இங்கு சௌஜானா ஹோட்டலில் பாத்தேக் வழங்கிய நோன்பு திறப்பு விருந்து நிகழ்ச்சியில் அவர் இதனை அறிவித்தார்.
பெருநாள் காலங்களில் குறிப்பாக கிழக்கு மலேசியாவிற்கு பயணிக்கும் பயணிகளுக்கு விமான கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப பாத்தேக் ஏர் இந்த சிறந்த முடிவை செய்துள்ளதாக அவர் சொன்னார்.


அரசாங்கத்தின் கோரிக்கையை செவிமடுத்து இந்த முடிவை செய்துள்ள பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தியை தாம் பாராட்டுவதாக அவர் சொன்னார்.
ஹாரி ராயா கொண்டாட்டத்தின் அனைவரும் தங்களின் குடும்பத்தாருடன் இணைவதற்கு பாத்தேக் ஏர் தனது விமான சேவைகளை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அதேவேளையில் குறிப்பாக கிழக்கு மலேசியாவில் உள்ள விமான நிலையங்கள் கூடுதல் நேரம் செயல்பட வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹாரி ராயா கொண்டாட்டத்திற்காக கோத்த பாரு, அலோர் ஸ்டார், பினாங்கு, கோத்தா கினபாலு, கூச்சிங், சிபு,சான்டகான் மற்றும் தாவாவ் ஆகிய உள்நாட்டு நகரங்களுக்கு பாத்தேக் ஏர் 140 கூடுதல் விமான சேவைகளை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் கோரிக்கையை செவிமடுத்து செயல்படுகிறோம்..!
இதனிடையே ஹாரி ராயா கொண்டாட்ட காலத்தில் குறிப்பாக கிழக்கு மலேசியா நகரங்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் கோரிக்கையை செவிமடுத்து தாங்கள் செயல்படுவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இந்த வகையில் சரவாக்கிற்கில் உள்ள நகரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வெ 319 மற்றும் சபாவில் உள்ள நகரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வெ 379 பாத்தேக் ஏர் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.


அனைத்தும் அடங்கிய இந்த ஒரு வழி பயண கட்டணம் கிழக்கு மலேசியாவிற்கு செல்லும் பயணிகளுக்கு ஒரு அற்புதமான செய்தி என அவர் சொன்னார்.
ஹாரி ராயா கொண்டாட்டத்தின் போது அனைவரும் தங்களின் குடும்பத்தாருடன் இனிய வேண்டும் என்பதே எங்களின் பிரதான நோக்கம் என அவர் சொன்னார்.
விரைவில் கொண்டாடப்படவிருக்கும் ஹாரி ராயா கொண்டாட்டத்திற்கு 22,000 கூடுதல் இருக்கைகளை பாத்தேக் ஏர் வழங்குவதாக அவர் சொன்னார்.
நியாயமான கட்டணத்தில் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதே பாத்தேக் ஏரின் பிரதான நோக்கம் என அவர் சொன்னார்.


இந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கிழக்கு மலேசியாவிற்கு செல்லும் பயணிகளின் சுமைகளை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மலேசிய விமான போக்குவரத்து ஆணைய நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ ஷரிபுடின் காசிம், சிவில் விமான போக்குவரத்து கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் நோரஸ்மான் மாமுட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular