Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்து சமயத்தை கேலி செய்த ஏரா எப்எம் ஊழியர்களுக்கு எதிராக போலீஸ் புகார்

கோலாலம்பூர் மார்ச் 9
கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ‘வேல் வேல்’ என இந்து மதத்தை கேலி செய்த ஏரா எப்எம் வானொலியின் 3 ஊழியர்களுக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டது.
இந்துக்களின் புனிதமான வார்த்தையான ‘ வேல் வேல் ‘ என்ற சொல்லை கேலி செய்த இந்த வானொலி நிலையத்தின் 3 ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய மக்கள் உருமாற்று இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு நேற்று செந்தூல் போலீஸ் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பல இனங்கள் வாழும் இந்நாட்டில் மற்றொரு மதத்தை இழிவு படுத்துவது ஒரு பண்பற்ற செயல் என்றார் அவர்.
அண்மையில் தான் இந்துக்களின் தைப்பூசத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தைப்பூச கொண்டாட்டத்தின் போது முருக கடவுளுக்கு காவடி ஏந்தி இந்து பக்தர்கள் வேல் வேல் என கூறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.
இந்த புனித வார்த்தையை அஸ்ட்ரோவிற்கு சொந்தமான ஏரா எப்எம் வானொலியை சேர்ந்த 3 ஊழியர்கள் கேவலப்படுத்தி இந்நாட்டில் உள்ள இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டதாக தமது போலீஸ் புகாரில் அவர் தெரிவித்தார்.
இந்த நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த போலீசார் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தங்கள் தவற்றை உணர்ந்து இவர்கள் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் சொன்னார். இந்த போலீஸ் புகாரின் போது டத்தோ டாக்டர் மகேன், டத்தோ ஷாமிளா ஷா, தயாபரன், திலீபன், அரு,மாக்மன்டின் குமார், ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular