
செப்பாங் மார்ச் 4
நிலைத்தன்மை யுக்தி மற்றும் விமான நிறுவன திறன் செயலில் கேப்பிட்டல் ஏ ஒரு உச்ச நிலையை அடைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு அனைத்துலக மதிப்பீட்டில் கேப்பிட்டல் ஏ மற்றும் அதன் துணை நிறுவனமான AAV உச்சநிலையை அடைந்துள்ளதாக ESG மதிப்பீட்டு நிறுவனம் கூறுகிறது.
கடந்த ஆண்டை விட அதிகபட்ச 5 புள்ளியில் 3.2 புள்ளியை விட 3.5 புள்ளி அடைவு நிலையை கேப்பிட்டல் ஏ அடைந்துள்ளது.

தனது விமான போக்குவரத்து வர்த்தகத் துறையில் 2025 ஆம் ஆண்டில் ஒரு உச்ச நிலையை கேப்பிட்டல் ஏ அடையும் என அறிக்கை ஒன்றில் அந்த நிறுவனம் கூறியது.
இதனிடையே கேப்பிட்டல் ஏ தொடர்ந்து தனது நிலைத்தன்மை வியூகத்தை வலுப்பெற செய்யும் என அதன் தலைமை நிலத்தன்மை அதிகாரி யாப் மூன் சின் கூறினார்.
விமான போக்குவரத்து வர்த்தக துறையில் கேப்பிட்டல் ஏ சரியான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை ESG மதிப்பீடு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டின் அடைவு நிலையே 2025 ஆண்டிற்கு ஒரு மைல் கல் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த புதிய ஆண்டில் கேப்பிட்டல் ஏ ஒரு சகாப்தத்தை படைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


