Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பெர்னாமா அனைத்து மொழிகளின் செய்திகளையும் வெளியிட்டு வருகிறது

கோலாலம்பூர் பிப் 26
தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா தேசிய மொழி உட்பட அனைத்து மொழிகளின் செய்திகளையும் பிரசுரித்து வருவதாக பாக்காத்தான் ஹராப்பன் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.யுனேஸ்வரன் கூறினார்.
பெர்னாமா தேசிய செய்தி நிறுவனம் மலாய் மொழியுடன் ஆங்கிலம், தமிழ், சீனம், ஸ்பெயின் மற்றும் அரேபிய மொழி செய்திகளையும் வெளியிட்டு வருவதாக நேற்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
மலாய் மொழி மட்டுமின்றி அனைத்து மொழி செய்திகளையும் சமமாக அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் பெர்னாமா சட்ட திருத்தத்தில் அந்த தேசிய செய்தி நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போது சமூக வலை தளங்களில் பல உண்மையற்ற செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை முறியடிக்க பெர்னாமாவின் பங்கு மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பெர்னாமா அனைத்து தரப்பினரின் செய்திகளை நியாயமாக வெளியிட்டு வருவதாக அவர் சொன்னார்.
பெர்னாமா தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா தொலைக்காட்சி, பெர்னாமா ரேடியோ உட்பட அனைத்து நிலைகளைலும் செய்திகளை வெளியிட்டு வருவதாக அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular