
கோலாலம்பூர் பிப் 20
இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தினர் தங்களின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு பாஸ் கட்சியுடன் மூன்றாம் அணியில் இணைய வேண்டும் என திரங்கானு மந்திரி பெசாரின் முஸ்லிம் அல்லாத விவகாரர்களுக்கான சிறப்பு அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன் கோபால கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
பாஸ் தலைமையிலான மூன்றாம் அணியில் நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்றார் அவர்.
நீதி மற்றும் நியாயத்திற்கு தான் பாஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
ஆனால் இதர அரசியல் கூட்டணிகள் உண்மையான மாற்றத்தை தராமல் வாக்குகளுக்காக இந்தியர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
நம்பிக்கை மற்றும் கடமையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நல்ல பங்காளித்துவ கூட்டணியை பாஸ் வழங்குகிறது என அவர் சொன்னார்.
அரசியல் தூண்டுதல், பொருளாதார போராட்டம் மற்றும் சமூக இடைவெளி காரணங்களால் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகம் பிளவு பட்டு கிடக்கிறது.
இந்த ஒற்றுமையின்மை காரணமாக இந்தி சமூகத்தில் தலை விதியை பிறர் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் ஓரம் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பிரிவினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு புதிய பாதையை அமைக்க நேரம் வந்து விட்டதாக அவர் சொன்னார்.
பாஸ் கட்சியுடன் மூன்றாம் அணியில் இணைந்தால், முடிவு செய்யப்படும் நடவடிக்கைகளில் இந்நாட்டில் உள்ள இந்தியர்கள் ஒரு வலிமையான பிரதிநிதித்துவத்தை பெற முடியும் என அவர் தெரிவித்தார்.
நல்ல அரசியல் கூட்டணியில் நியாயமான கொள்கைகளின் வலி இந்தியர்களுக்கு அதிகமான பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என அவர் சொன்னார்.
பாஸ் தலைமைத்துவத்தின் கீழ் நமது சமூகம் வலிமை அடையும் என்பது மட்டுமின்றி பிரகாசமான எதிர்காலம் அமையும்.
இது நமது நேரம், ஒன்றிணைந்து இந்திய சமூகத்திற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தங்களின் பங்காளிகளை பாதுகாப்பதும் ஆதரிப்பதும் தான் முஸ்லிம்களின் பிரதான கடமை என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அனைவரின் நீதிக்கு இஸ்லாம் உத்திரவாதம் அளிப்பதாக நேற்று முன்தினம் 25 பிப்ரவரி 2025 நாடாளுமன்ற உரையில் பாஸ் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி ஹாவாங் கூறியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


