Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஏர் ஆசியாவின் சாதனைக்கு அதன் பணியாளர்களின் பங்களிப்பே காரணம்!

செப்பாங் பிப் 14
தொடர்ந்து பல ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக ஏர் ஆசியா தேர்வு பெற்று வருவது, அதன் அனைத்து பணியாளர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பே காரணம் என ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் பெருமிதம் கொண்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமாக AirlineRatings.com நிறுவனம் ஏர் ஆசியாவை தேர்வு செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த சாதனைக்கு ஏர் ஆசியாவின் அனைத்து நட்சத்திரங்கள் என அன்புடன் அழைக்கப்பட்டு வரும் இந்நிறுவனத்தின் பணியாளர்கள், அயராது உழைத்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
2001 ஆம் ஆண்டில் மலேசியாவில் 2 உள்நாட்டு சேவைகளுடன் ஏர் ஆசியா தனது விமான சேவையை அமைதியுடன் தொடங்கியது.
இப்பொழுது சுமார் 800 மில்லியன் பயணிகள் மலிவு விலை கட்டணத்தில் ஏர் ஆசியா விமானங்களில் பயணித்துள்ளனர்.
130 நகரங்களுக்கு மேல் ஏர் ஆசியா தனது விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் ஏர் ஆசியா தனது விமான நிறுவனங்களை நிறுவி விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
பாதுகாப்பு, பயணிகள் திருப்தி, நம்பிக்கை தன்மை போன்று விவகாரங்களில் ஏர் ஆசியா எப்பொழுதுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக ஃபோ லிங்கம் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டில் தனது விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் மற்றும் புதிய இரண்டாம் நிலை நகரங்களுக்கு விமான சேவையை மேற்கொள்வதிலும் ஏர் ஆசியா அதிக கவனம் செலுத்தி வரும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே தனது விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் சொல்லும் நகரங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டுதான் விமான நிறுவனங்களின் தர மதிப்பீடு செய்யப்படும் என Airlines Ratings நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஷாரன் பிட்டர்சென் கூறினார்.
மலிவான கட்டணத்தில்
தென்கிழக்கு ஆசியாவை உலகத்துடன் இணைப்பதில் ஏர் ஆசியா வெற்றி கண்டுள்ளதாக அவர் சொன்னார்.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் திருப்தியான சேவைகளுக்கு ஏர் ஆசியா எப்பொழுதுமே முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு முழுவதும் 63 மில்லியன் பயணிகள் ஏர் ஆசியாவில் பயணித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதர மலிவு கட்டண விமான நிறுவனங்களை ஒப்பிடுகையில்,ஏர் ஆசியாவில் கிடைக்கும் சூடான உணவுகள் சுவை மிகுந்தவை என அவர் சொன்னார்.
அனைத்து நிலையிலும் பாதுகாப்பு மற்றும் தரமான சேவையை வழங்கி வருவதால் ஏர் ஆசியா தொடர்ந்து உலகின் தலைசிறந்த மலிவு கட்டின விமான நிறுவன இடத்தை பிடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular