
சுங்கைவே பிப் 15
முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான ஹெய்னெகென் மலேசியாவின் ஆண்டு வருவாய் 6 % அதிகரிப்பு கண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மார்டிஜ்ன் ரெனே கூறினார்.
2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இந்த 6 விழுக்காடு அதிகரிப்பை தொடர்ந்து, இந்நிறுவனத்தின் வருவாய் வெ 2.80 பில்லியன் என அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இங்கு ஹெய்னெகென் மலேசியா நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டு இறுதி காலாண்டின் நிதி அறிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு வழங்கிய விளக்க கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் வெ 2.64 பில்லியன் தான் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஹெய்னெகென் மலேசியா Tiger Soju,Flavoured Lager மற்றும் Edelweiss Peach என 3 புதிய பானங்களை தயாரித்து வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வாடிக்கையாளர்களுக்கிடையே இந்த புதிய பானங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அண்மையில் நடத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்த பானங்களுக்கு விருதுகள் கிடைக்கப்பெற்றது மகிழ்ச்சி தருவதாக அவர் சொன்னார்.
ஹெய்னெகென் மலேசியா தயாரித்து வெளியிட்டு வரும் மது பானங்களுக்கு மலேசியர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அவர் சொன்னார்.
அதே வேளையில் ஸ்டார் அக்கடமி மூலம் ஹெய்னெகென் மலேசியாவின் 10,000 மதுபான பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வந்துள்ளது.
இந்த துறையில் இளைஞர்களுக்கு ஆற்றல் திறனை வளர்க்க இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் தனது சமூகப் பொருளாதார தாக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்த ஹெய்னெகென் மலேசியா உறுதி கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பீர் வரியை அதிகரிக்காத அரசாங்கத்தின் முடிவை தாம் பெரிதும் வர வைப்பதாக அவர் சொன்னார்.
காரணம் இதற்கான வரி அதிகரிக்கப்பட்டால் கள்ள சாராயம் நடவடிக்கைகள் மோசமடையும் ஏன் அவர் சுட்டிக் காட்டினார்.
இது அரசாங்கத்தின் வருவாயையும் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதில் வழியாக அரசாங்கத்தின் வருவாய்க்கு வெ 1.4 பில்லியன் ஹெய்னெகென் மலேசியா வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஹெய்னெகென் மலேசியா சமூகங்களுக்கு உணவு உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் இந்நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் தேவையான அடிப்படை உதவிகளை வழங்கி வருவதாக அவர் சொன்னார்.
சமூக பணிகளுக்கு இந்நிறுவனம் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இந்த விளக்க கூட்டத்தில் இந்நிறுவனத்தின் பெரு நிறுவன விவகாரம் மற்றும் சட்ட இயக்குனர் ரேணுகா இந்திர ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


