
பினாங்கில் மாபெரும் கெசுமா மடானி தைப்பூச கொண்டாட்டம்
ஜியார்ஜ் டவுன் பிப் 12
இந்துக்களின் பெருவிழாவான தைப்பூச கொண்டாட்டத்தையொட்டி பினாங்கில் மாபெரும் கெசுமா மடானி தைப்பூச கொண்டாட்டம் நடைபெற்றது.
மனிதவள அமைச்சின் ஏற்பாட்டிலான இந்த கெசுமா மடானி தைப்பூச கொண்டாட்டத்தில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் மற்றும் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
இந்த புனித திருநாளில் முருகப்பெருமானுக்கு தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி அவரின் ஆசியை பெறும்படி துணையமைச்சர் சரஸ்வதி கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்துக்களுக்கு இது ஒரு சமய திருநாள். இது போன்ற சமய திருநாளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சொன்னார்.

இந்த கொண்டாட்டத்தில் காவடி மற்றும் பால்குடம் ஏந்தும் பக்தர்கள் கண்ணியத்தை காக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் இந்நாட்டில் உள்ள அனைத்து இனங்களின் ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், ஜசெக தேசியத் தலைவர் லிம் குவான் எங், பினாங்கு முதல்வர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



