
ஜொகூர் பாரு பிப் 11
இங்குள்ள ஜொகூர் பாரு தண்டாயுதபாணி ஆலய தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் ஏந்தி முருகனுக்கு தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
விடியற் காலை முதல் இங்குள்ள ராஜ மாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக காவடிகள் மற்றும் பால் குடங்கள் ஏந்தி தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.
சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆலயத்திற்கு வருகை புரிந்த அனைத்து பக்தர்களுக்கும் நண்பகல் உணவு வழங்கப்பட்டது.
காவடி மற்றும் பால்குடங்களை ஏந்தி வந்த பக்தர்களுக்கு தண்டாயுதபாணி ஆலய நிர்வாகம் பாதுகாப்பு வசதியை வழங்கியது.


