
லாபுவான் பிப் 9
இங்குள்ள கூட்டரசு பிரதேச லாபுவான் திருமுருக ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சிறப்பு வருகை புரிந்தார்.
இந்த கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு வருகை புரிந்து ஆலய நிர்வாகம் சிறப்பு செய்தது.
இது போன்ற கொண்டாட்டத்திற்கு சுற்றுவட்டார இந்து பெருமக்கள் திரளாக கலந்து இறைவனின் ஆசையை பெற வேண்டும் என சரஸ்வதி தமது உரையில் கூறினார்.
அதே வேளையில் இந்திய பெற்றோர்கள் பிள்ளைகளை ஆலயத்திற்கு அழைத்து வரும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 800 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத்திற்கு வருகை புரிந்த அனைத்து பக்தர்களுக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது.


