
கோலாலம்பூர் பிப் 8
நாட்டில் முஸ்லிம்கள் அல்லாதவர்களின் வழிபாட்டு தளங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பாஸ் ஆதரவு பேரவை வரவேற்றுள்ளது.
மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் (ஜாக்கிம்) இந்த வழிகாட்டுதல் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு முன்னெடுப்பு என பாஸ் தேசிய ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இந்நாட்டில் பல இனம் மற்றும் மதங்களுக்கு இடையே பதற்றத்தை தணிக்க இது ஒரு முன்னெடுப்பாகும்.
ஆகையால் இந்த விவகாரத்தில் சமய விவகாரங்கக்ளுக்கான பிரதமர் இலாக அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தாரை தாம் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
மலாய்காரர்கள்
இதர சமயங்களில் விழாக்களில் கலந்து கொள்ள இந்த வழிகாட்டுதல் ஒரு ஆலோசனையாக கருத வேண்டும். இந்த விவகாரத்தை ஒரு சர்ச்சையாகக் கூடாது இது அவர் தெரிவித்தார்.
இதர சமயத்தினரின் கொண்டாட்டங்களில் எதை செய்ய வேண்டும் அல்லது எதை செய்யக்கூடாது என்பதை எடுத்துரைக்கும் இந்த வழிகாட்டுதலை நாம் வரவேற்க வேண்டும் என அவர் சொன்னார்.
மத வழிபாட்டாளர்களுக்கு இடையிலான நல்லிணக்க கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.
ஆகையால் ஜாக்கிம்மின் இந்த வழிபாட்டு விதிமுறை குறித்து முஸ்லிம் அல்லாதவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை என அவர் ஆலோசனை கூறினார்.
மலேசியாவில் பல இன மக்கள் பல மதத்தை சேர்ந்த மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆகையால் ஜாக்கிம்மின் இந்த வழிகாட்டுதல் அறிவிப்பை வெளிப்படை தன்மையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.
அதே வேளையில் மதம், சமயம் மற்றும் அரசமைப்பு தொடர்பான விவகாரங்களில் அரசாங்கம் மிக கவனமுடன் செயல் பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
காரணம் இந்த விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பதற்ற சூழ்நிலை ஏற்படும்.
ஆகையால் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்கு மிக அவசியம் என அவர் பரிந்துரைத்தார்.


