
ஜாலான் புக்கிட் காஜாங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த யோகிஷா தனபாலன் 16-17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் காத்தா பிரிவில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் 16-17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் குமித்தே பிரிவில் மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்று மலேசிய குழுவிற்கு பெருமை சேர்த்தார்.
இந்தப் போட்டியில் 50 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான வெட்ரன் காத்தா பிரிவில் கியோஷி டாக்டர் விஜய் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
பிப் 1 மற்றும் 2 தேதிகளில் மும்பை பிரியடார்ஷி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து, மொரிசியஸ், சௌதி அரேபியா, ஸ்ரீ லங்கா, மலேசியா, ஈரான் மற்றும் நேபால் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை சிறப்பாக வழி நடத்திய போட்டியின் தலைவர் ஹன்ஸி ஹசான், மாஸ்டர் ஞான லிங்கம் (இங்கிலாந்து),கியோஷி ஹரால்டு பெஷன் (மொரிசியஸ்),ஷிஹான் நிமல் கலுபானா ஆகியோருக்கு கியோஷி டாக்டர் விஜய் நன்றி கூறினார்.

மேலும் இந்த போட்டியை வெற்றியடைய செய்த ஹான்ஷி சஞ்ஜிட் கேஆர் சாஹா, கெடா கராத்தே சங்க தலைவர் கியோஷி டாக்டர் ஸ்டாலின், துணைத் தலைவர் டத்தோ முனியாண்டி ஆகியோருக்கும் அவர் நன்றி நல்கினார்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள் அனைவருக்கும் அவர் பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டார்.


