
ஜொகூர் பாரு ஜன 27
ஜொகூர் மாநில அளவிலான ஒற்றுமை பொங்கல் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
நேற்று காலை இங்கு லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற மாநில அளவிலான ஒற்றுமை பொங்கல் கொண்டாட்டத்தை ஜொகூர் மாநில மஇகா தலைவரும் மாநில அரசாங்கம் ஆட்சி குழு உறுப்பினருமான ரவீன் குமார் கிருஷ்ணசாமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த ஒற்றுமை பொங்கல் கொண்டாட்டத்தில் பல சிறப்பு அம்சங்கள் நடைபெற்றது.
கலாச்சார நடனங்கள், இந்திய பாரம்பரிய நிகழ்ச்சி உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் நடைபெற்றது.
கோலம் போடுதல், உரி அடித்தால், தோரணம் பின்னுதல் மற்றும் அதிர்ஷ்ட குலுக்கு போன்ற அங்கங்கள் நடைபெற்றன.

இந்த ஒற்றுமை பொங்கல் கொண்டாட்டம் நம்மிடையே இருந்து வரும் அணுக்கமான ஒற்றுமை மட்டும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக ரவீன் குமார் தெரிவித்தார்.
இந்த கொண்டாட்டத்தில் மாநில மஇகா துணைத் தலைவர் டத்தோ நிலா ராஜா, தேசிய மஇகா மகளிர் அணி தலைவியும் கெமெலா சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி, தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அரவின் கிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது.



