
கோலாலம்பூர் ஜன 26
பரதன் கிண்ணம் மலேசிய காற்பந்து போட்டிகளில் பழமையான ஒன்று என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மேலும் நாட்டின் விளையாட்டு அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட தக்க சம்பவம் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இரவு இங்கு செலாயாங் அரங்கில் பரதன் கின்ன இறுதிப்போட்டியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
காற்பந்து போட்டிகளில் புகழ்பெற்ற போட்டியான பரதன் கிண்ணத்தை வடிவமைத்தவர் மேஜர் ஜெனரல் டாக்டர் பிரமதா நாத் பரதன் ஆவார்.
காற்பந்து விளையாட்டின் வழி விளையாட்டு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் டாக்டர் பரதன் இந்த போட்டியை தொடங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மலாயாவில் பிரிட்டிஷ் காலணத்துவத்தின் இப்போது மேஜர் ஜெனரல் டாக்டர் பிரமதா நாத் பரதன் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்து வந்தார்.

நாட்டின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கும் இராணுவத்திற்கும் இவரது அறுப்பணிப்பை யாரும் மறந்து விட முடியாது என அவர் குறிப்பிட்டார்.காற்பந்து விளையாட்டின் வழி விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு இவர் அதிக பங்காற்றியுள்ளார். இதன் வழி சமூகம் மற்றும் ஒற்றுமைக்கு இவரின் பங்கு அளப்பரியது என அவர் சொன்னார்.இப்ராந்தியத்தில் காற்பந்து போட்டி மற்றும் திறன்களை வளர்க்கும் நோக்கில் கடந்த 1940 ஆம் ஆண்டில் பரதன் கிண்ணம் தொடங்கப்பட்டது.
மலேசியாவின் பழமை வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க போட்டிகளில் ஒன்று தான் பரதன் கிண்ணம்.

காற்பந்து விளையாட்டுத்துறையில் பரதன் கிண்ணம் ஒரு முன்னோடி என அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடந்த பரதன் கிண்ண இறுதிப்போட்டியில் திரெங்கானு இந்திய குழு 1-0 புள்ளியில் நெகிரி செம்பிலான் இந்திய குழுவை தோற்கடித்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற குழு மட்டும் இரண்டாம் நிலை குழு விளையாட்டு துணையமைச்சர் சரஸ்வதி கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.


