Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஒற்றுமை விவகாரங்கள் குறித்து புகார் செய்ய e-Sepakat முறை

புத்ரா ஜெயா ஜன 15
ஒற்றுமை விவகாரங்கள் மீதான சர்ச்சைகள் குறித்து புகார் செய்ய பொதுமக்கள் e-Sepakat முறையை பயன்படுத்தலாம் என தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் கூறினார்.
தேசிய ஒற்றுமை துறை இலாக்கா கையாண்டு வரும் இந்த e-Sepakat முறை வழி கடந்த ஆண்டு முழுவதும் 231 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நேற்று தேசிய ஒற்றுமை துறை அமைச்சில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
பதிவு செய்யப்பட்ட புகார்களில் 89 புகார்கள் வெறுப்பை ஏற்படுத்தும் சம்பந்தப்பட்டவை. மேலும் 39 புகார்கள் இனங்கள் சம்பந்தப்பட்டவை என்றார் அவர்.
இதுவரை இந்த e-Sepakat முறை மாவட்ட அளவில் ஒற்றுமை துறை அதிகாரிகள் தான் கையாண்டு வருகின்றனர்.
இவ்வாண்டு இந்த e-Sepakat முறையை பொதுமக்களும் பயன்படுத்தலாம் இன அவர் சுட்டிக் காட்டினார்.
பொதுமக்கள் e-Sepakat முறை வழி தங்களின் புகார்களை செய்யலாம் என அவர் சொன்னார்.
ஒற்றுமை சம்பந்தப்பட்ட புகார்களுக்கு தீர்வு காண தொடர்பு துறை அமைச்சு, தொடர்பு மற்றும் பல்லூடக வாரியம், அரச மலேசியா போலீஸ் படை மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆகிய தரப்பினருடன் தமது அமைச்சு ஒத்துழைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.


நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்த பல்வேறு திட்டங்களை தமது அமைச்சு அமலாக்கம் செய்து வருவதாக அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு ஒற்றுமை தொடர்பாக 730 திட்டங்களை தேசிய ஒற்றுமை துறை அமைச்சு அமலாக்கம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular