Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

எந்நாளும் வாழ்க்கை தித்திக்க இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

தரணியெங்கும் தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனதிலும் இன்பம் பொங்க தமது இனிய பொங்கல் வாழ்த்துக்களை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்துக் கொண்டார்.
இந்த மங்களகரமான பொங்கல் திருநாள் அனைவரும் வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நல்லதொரு வாழ்வு பொங்கிட அஷ்ட லட்சுமிகளும் இல்லத்தில் தங்கிட இந்நாளை போல் எந்நாளும் திட்டிட தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பொங்கல் பானை பொங்கி வழிவது போல் உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்கி வழியட்டும்.
அறுவடையைக் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை புதிய நம்பிக்கைகளையும் புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன், நல்லிணக்கத்துடன் இந்த பண்டிகை கொண்டாட வேண்டும் என தமது வாழ்த்து செய்திகள் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular