
சிரம்பான் ஜெயா ஜன 7
இங்கு தாமான் ஜெயாவில் சில பகுதிகளில் பொறுப்பற்ற தரப்பினர் தெலிகோம் மலேசியாவின் மின் கம்பங்களை துண்டிக்க செய்ததை தொடர்ந்து இங்குள்ள மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பாக்காத்தான் ஹராப்பன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் மற்றும் அவரின் உதவியாளரும் சிரம்பான் நகராண்மைக் கழக உறுப்பினருமான ஜாமிலா நேரில் சென்று கண்டறிந்தனர்.
இந்த பொறுப்பற்ற தரப்பினர் மின் கம்பங்களை துண்டித்ததால் இங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாக குணா கூறினார்.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பொறுப்பற்ற தரப்பினர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மின்னியல் கம்பங்கள் திருட்டு சம்பவம் குறித்து தெலிகோம் மலேசியா போலீஸ் புகார் செய்யவிருப்பதாக என அவர் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில் தெலிகாம் மலேசியா பணியாளர்கள் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இனி வரும் காலங்களில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க இந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகள் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் இம்மாநில மக்களின் நல் வாழ்வில் அதிக அக்கறை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


