
கோலாலம்பூர் ஜன 4
அரண்மனையின் அறிக்கையை தொடர்ந்து சிறை தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜீப் ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளும் திட்டத்தை அம்னோ கைவிட்டதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் செயலாளர் அஷிராப் வாஜ்டி கூறினார்.
முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு நீதி கிடைக்க பேரரசர் மீது அம்னோ முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிறை தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் அம்னோ தலைவருமான நஜீப்பை ஆதரிக்கும் பேரணி எதிர்வரும் ஜன 6 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்து.
இதனிடையே இந்த ஆதரவு பேரணியே ரத்து செய்ய தாங்கள் திட்டம் கொண்டிருக்கவில்லை என பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அமாட் பாட்லி கூறினார்.
காரணம் இந்த பேரணி சட்டத்திற்கு உட்பட்டது என அவர் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் பாஸ் அவ்வப்போது நிலவரங்களை கண்காணித்து வரும் என அவர் தெரிவித்தார்.
காரணம் பேரணியை நடத்த கூட்டரசு சட்டம் உத்திரவாதம் அளிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கூட்டுறவு பிரதேசத்திற்கு உட்பட்டு புரியப்படும் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் பேரரசருக்கு உண்டு என அரண்மனையின் அறிக்கைக்கு அம்னோ மதிப்பளிப்பதாக அஷிராப் வாஜ்டி குறிப்பிட்டார்.


