
ஜொகூர் பாரு டிச 31
இங்கு ஜாலான் கோயில் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தின் புதிய தலைவராக சண்முகம் செட்டியார் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை டிச 28 ஆம் தேதி இந்த ஆலயத்தின் 41 ஆவது பொதுக் கூட்டத்தில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் ஆலயத்தின் 135 ஆயுள் கால உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே ஆலய உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் பங்களிப்புக்கு தாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சண்முகம் செட்டியார் கூறினார்.
ஆலய உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கி வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தமது தலைமைத்துவத்தின் கீழ் ஆலயம் சிறப்பாக செயல்படுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



