Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அமைச்சருக்கு எதிராக பாஸ் ஆதரவு பேரவை போலீஸ் புகார்!

ஜெராண்டுட் டிச 30
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சில் நடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்ட விவகாரம் குறித்து அதன் அமைச்சர் ஙொ கோர் மிக் அறிக்கைக்கு எதிராக பாஸ் ஆதரவு பேரவை போலீஸ் புகார் ஒன்றை செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் ஙாவின் அறிக்கை தவறான நோக்கத்திலும் மற்றும் அவதூறாகவும் இருப்பதாக பாஸ் ஆதரவு பேரவையின் தேசிய தலைவர் பாலசுப்பிரமணியம் நாச்சியப்பன் மற்றும் அந்த பேரவையின் பகாங் மாநில செயலாளர் சிவா தங்கள் புகாரில் கூறினர்.
நாட்டின் அமைதியை நிலைநிறுத்துவதில் பாஸ் ஆதரவு பேரவை ஒன்றிணைந்து போராடும் என தங்கள் புகாரில் அவர்கள் கூறினர்.
அதேவேளையில் மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைக்கு எதிராக தாங்கள் போராடுவோம் என குறிப்பிட்டனர்.
மேலும் இந்த விவகாரத்தில் அமைச்சர் ஙா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.
நாட்டின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு தாங்கள் எப்பொழுதுமே முன்னுரிமை வழங்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular