
கோலாலம்பூர் டிச 30
ஜசெகவின் முக்கிய தலைவர்களை அவதூறாக பேசியுள்ள பாஸ் கட்சியின் கெப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்தூராவின் செயலுக்கு பாஸ் கட்சி பொறுப்பேற்குமா என ஜசெக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி எழுப்பினார்.
அவதூறு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள சித்தி மஸ்தூராவின் தவறுகளுக்கு பாஸ் கட்சி பொறுப்பேற்கும் என அக்கட்சியின் தலைவர் ஹாடி ஹாவாங்கின் அறிக்கை வேடிக்கையாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரத்தில் 3 ஜசெக தலைவர்கள் தொடுத்த வழக்கில் மஸ்தூரா தோல்வி கண்ட விவகாரம் குறித்து ஹாடி கருத்துரைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மஸ்தூராவை ஆதரித்து ஹாடி பேசியிருந்தால் அக்கட்சியின் நிலைப்பாடு தான் என்ன என அவர் உணவினார்.
ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், கட்சியின் தலைவர் லிம் குவான் எங் மற்றும் உதவித் தலைவர் திரேசா கோக் ஆகியோருக்கு வெ 825,000 இழப்பீடு தொகை வழங்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமக்கு எதிராக நீதிமன்றத்தில் இந்த உத்தரவிற்கு ஏற்ப இம்மூவருக்கு இழப்பீட்டு தொகையை வழங்க கட்சியில் வசூல் வேட்டையில் மஸ்தூரா ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் வந்த 3 ஜசெக தலைவர்களிடம் மன்னிப்பு கேட்கும் படி மஸ்தூராவிற்கு ஹாடி ஹாவாங் ஆலோசனை கூறுவதே விவேகமான செயல் என்றார் அவர்.
ஜசெக தலைவர்களை சாடுவதையே பாஸ் தலைவர்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


