
காடுகளில் ஆபத்துகளிலிந்து மீட்கப்படும் யானைகள் இந்த சரணாலயங்களில் அடைக்கலம் கொடுக்கப்படுகின்றன.
இந்த காப்பகங்களில் ஆபத்துகளிலிருந்து மீட்கப்படும் யானைகளுக்கு முறையான உணவு மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
இது போன்று சரணாலயங்களில் ஒன்றுதான் மா டேங் மாவட்டத்தில் உள்ள சாங் தாய் ஹெரிதேச்.
இந்த யானை காப்பகத்தில் காடுகளில் விபத்துகளிலிருந்து மீட்கப்பட்ட யானைகளுக்கு முறையான உணவு மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
இந்த யானைகளின் சாகசங்களை பார்க்க வரும் சுற்றுப்பயணிகள், அங்கு விற்கப்படும் கரும்பு, வாழைப்பழம் மற்றும் இதர உணவு வகைகளை வாங்கி இந்த யானைகளுக்கு உணவளிக்கலாம்.
சாந்த குணம் கொண்ட இந்த யானைகள் சுற்றுப்பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கும் காட்சிகள் நமக்கு மன மகிழ்ச்சியை தருகிறது.

அதே வேளையில் இந்த யானைகளை அழைத்து சென்று அருகாமையில் உள்ள ஆற்றில் நீர் விளையாட்டில் ஈடுபடலாம்.
நீர் விளையாட்டின் போது இந்த யானைகளின் சாகசங்கள் நம்மை அதிகம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த காப்பகத்தில் உள்ள ஒவ்வொரு யானைக்கும் ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் இறுதியில் இந்த யானைகளை தத்தெடுத்துக் கொள்ள சுற்றுப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நாடு திரும்பும் சுற்றுப்பயணிகள் தாங்கள் தத்தெடுத்த யானைகளுக்கு தங்களால் இயன்ற பண உதவிகளை தங்கள் நாடுகளிலிந்து காப்பகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
பொதுவாக தாய்லாந்தில் யானைகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவத்தை அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வருகிறது.
தாய்லாந்தில் சுமார் 3,000 முதல் 4,000 யானைகள் உள்ளன.

இந்த யானைகளை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கவே அந்த நாட்டில் அதிகமான சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தவிர்த்து சியாங் மாய் நகரில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பாதைகள் நம்மை அதிகமாக கவரும்.
இந்த நகர் இரவு சந்தை மற்றும் நினைவு பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் புகழ்பெற்ற இடமாகும்.
அந்தி விழும்போது சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு சந்தைகள் சுறுசுறுப்பாக காட்சியளிக்கும். இங்கு துடிப்பான ஸ்டால்கள், கைவினைப் பொருட்கள், ஆடைகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்குகின்றன.
இவ்விரு நாட்களில் இந்த இரவு சந்தைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இங்கு பல வகையான உணவு, நினைவு சின்ன பொருட்கள் மற்றும் துணிமணிகளுக்கு பஞ்சமே இல்லை என்று தான் கூற வேண்டும்.
சியாங் மாய் நகர் தாய் மசாஜ் பெற ஒரு புகழ் பெற்ற இடமாகும். இங்கு ஒரு இனிமையான தாய் மசாஜ் செய்து கொண்டால் நிதானமாகவும் புத்துணர்ச்சியுடனும் தோன்றலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒட்டுமொத்தமாக சியாங் மாய் ஒரு சொர்க்க பூமி என்று தான் கூற வேண்டும்.
அனைத்துலக சுற்று பயணிகள் தங்களின் விடுமுறையை கழிக்க இந்த நகர் ஒரு அற்புதமான இடமாகும்.
உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தினமும் இரு விமான சேவையின் மூலம் ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகளை இந்த நகருக்கு அழைத்து வருகிறது.


