Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மடானி அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது!

ரெம்பாவ் டிச 28
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதாக பாக்காத்தான் ஹராப்பன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கூறினார்.
மக்களின் நலனுக்காக மடானி அரசாங்கம் வகுத்து வரும் மேம்பாட்டு திட்டங்கள் மக்களை கவர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு பெக்கான் பெடாஸ்,தாமான் கோப்ராஸி, கோத்தா மற்றும் கெமன்சே வட்டார மக்களுக்கு 2025 ஆம் ஆண்டு காலண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.


இந்த வட்டாரங்களில் உள்ள குறிப்பாக மலாய் சமூகத்தினர் ஜசெக கட்சியின் மீதான தவறான தோற்றத்தை கலைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மடானி அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்து வரும் ஜசெகவின் உண்மையான போராட்டங்களை இவர்கள் உணர்ந்து விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஜசெக அனைத்து இனத்தவருக்கும் சார்ந்த ஒரு அரசியல் கட்சி என்ற உண்மை நிலையை இவர்கள் புரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த வட்டாரங்களில் உள்ள சந்தைகள் மற்றும் கடைகளை சேர்ந்த சுமார் 1,000 பேருக்கு 2025 ஆம் ஆண்டு காலண்டர்களை குணா மற்றும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சி குழு உறுப்பினர் நிக்கோல் டான் வழங்கினர்.
இந்த காலண்டர்களில் இம்மாநிலத்தின் 11 சட்டமன்ற மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைத்தொலைபேசி எண்களும் இடம் பெற்றுள்ளது.
தங்களின் தொகுதிகளில் பிரச்சனைகளை எதிர்நோக்கும் மக்கள் இந்த தொலைபேசி எண்களில் தங்களின் தேர்தல் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சினைகளை சொல்லலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular