
கோலாலம்பூர் டிச 28
கிளாந்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் கட்டாய ஹலால் சான்றிதழ் பரிந்துரை குறித்து அம்மாநிலத்தில் உள்ள இஸ்லாம் அல்லாதவர்கள் கடினமாக கருதவில்லை என பாஸ் ஆதரவு பேரவையின் தலைவர் பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் கூறினார்.
இருப்பினும் இந்த பரிந்துரை தொடக்க கட்ட பேச்சு வார்த்தையில் மட்டுமே உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
முறையான ஆய்வு மற்றும் பேச்சு வார்த்தைக்கு பின்னரே இந்த பரிந்துரை அமலாக்கத்திற்கு வரும் என அவர் சொன்னார்.
அனைத்து சமூகங்களின் நலன்கள் மற்றும் உணர்வுகளுக்கு பாஸ் எப்பொழுதுமே முன்னுரிமை வழங்கி வரும் என்றார் அவர்.
ஆகையால் இந்த விவகாரத்தில் மலேசியா குறிப்பாக மாநிலத்தை சேர்ந்த இஸ்லாம் அல்லாதவர்கள் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவிற்கும் வரக்கூடாது என அவன் நினைவுறுத்தினார்.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை கிளந்தானில் 453 உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 80 விழுக்காடு இஸ்லாமிய உரிமையாளர்களுக்கும் மீதம் இஸ்லாமிய அல்லாத உரிமையாளர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் கிளாந்தான் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாதவர்கள் இந்த விவகாரத்தை கடினமாக கருதவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டார்.


