
கோலாலம்பூர் டிச 27
இந்நாட்டின் பன்முகத்தன்மையே அந்நிய முதலீட்டாளர்களை கவர்வதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
‘நமது சமூகங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமை முதலீட்டாளர்களை கவரும் அம்சங்களில் ஒன்று’ என்றார் அவர்.
நமது இந்த அனுபவங்களிலிடமிருந்து கற்றுக்கொள்ள இதில நாடுகள் ஆர்வம் காட்டுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நம்மிடம் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இப்பிராந்தியத்தில் ஒரு முன்மாதிரியாக விளங்க இந்த சவால்களை நாம் கடந்து வந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
இனப் பதற்றம் இல்லாததால் மட்டும் மலேசியாவின் வலிமை நின்றுவிடவில்லை. அமைதி மற்றும் நல்லிணக்கம் நாட்டின் வலிமைக்கு உறுதுணையாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சில நாடுகளில் தொடர்ந்து இனப் பதற்றம் அல்லது பகைமை நிலை வருகிறது. ஆனால் ருக்கூன் நெகராவின் என கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூகத்தை வடிவமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எதிர்வரும் 2025 ஆசியான் உச்சநிலை மாநாட்டில் தனது தேசிய ஒற்றுமை மாதிரி தன்மையை மலேசியா வெளிப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
நாட்டின் பல்லின, பல கலாச்சாரம் போன்ற அம்சங்களை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு வெளிப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
உலக அரங்கில் மலேசியா ஒரு முன்மாதிரி நாடாக திகழ்ந்து வருகிறது. அமைதிக்கும் ஒற்றுமைக்கும் நம் நாடு ஒரு உதாரணம் என அவர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முயற்சிகளின் காரணமாக உலக அளவில் மலேசியாவிற்கு அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
மலேசியாவில் முதலீடுகளை அதிகரிக்க அனைத்துலக தலைவர்களுடன் பிரதமர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என செனட்டர் சரஸ்வதி குறிப்பிட்டார்.


