Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

செம்பெரோங் தோட்ட மற்றும் மாடோஸ் தோட்ட தமிழ் பள்ளிகளுக்கு 6 ஏக்கர் நிலம்

ஜொகூர் பாரு டிச 27
ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ள செம்பெரோங் தோட்ட மற்றும் மாடோஸ் தோட்ட தமிழ் பள்ளிகளுக்கு ஜொகூர் மஇகா தலைவரும் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான ரவீன் குமார் கிருஷ்ணசாமி மாநில அரசாங்கத்திடமிருந்து 6 ஏக்கர் நிலத்தை பெற்றுத் தந்தார்.
இது ஜொகூர் பாரு இந்திய சமூகத்திற்கு ஒரு இனிப்பான செய்தியாகும். காரணம் அதிகமான பாஸ் கட்டணத்தை செலுத்தி இங்குள்ள இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
ஜொகூர் பாரு மாவட்டத்தில் இந்த 2 புதிய பள்ளிகள் கட்டப்படுவதன் மூலம் இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறைந்த செலவில் இப்பள்ளிகளுக்கு அனுப்ப முடியும்.
இதனிடையே இந்த 2 தமிழ் பள்ளிகளை கட்ட அனுமதி வழங்கி அதற்கான நிலத்தை பெற்று தந்த ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸிக்கு தாம் நன்றி கூறுவதாக ரவீன் குமார் கூறினார்.
மேலும் இந்த 2 தமிழ் பள்ளிகளின் கட்டுமான பணி குறித்து மாநில அரசாங்க நிறுவனங்களுக்கு பணித்துள்ள ஜொகூர் மந்திரி பெசாரை தாம் வெகுவாக பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பள்ளிகளின் கட்டுமானத்திற்கு துணை நின்ற மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், ஜொகூர் தமிழ் பள்ளிகளின் அமைப்பாளர் ரவி, முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் நடராஜன், தமிழ் பள்ளிகள் வாரியம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி கூறிக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular