Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கெடுக்கும் நோக்கிலான காணொளிகள் மற்றும் செய்திகளை நிறுத்திக் கொள்ளுங்கள்

கோலாலம்பூர் டிச 27
தமக்கு எதிராக
கெடுக்கும் நோக்கிலான காணொளிகள் மற்றும் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம்களை மதமாற்றவோ அல்லது மலேசியாவை கிறிஸ்துவ நாடாக மாற்றம் என்னமோ தமக்கில்லை என்றார் அவர்.
முன்னாள் போலீஸ் படை தலைவர் மூசா ஹசானுக்கு எதிரான தமது அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமது மேல்முறையீடு விசாரணைக்கு இந்த காணொளிகள் மற்றும் செய்திகள் இடைஞ்சலாக இருக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
கூட்டரசு சட்டத்திற்கு தாம் மதிப்பளிப்பதாடு, இஸ்லாம் கூட்ட அரசு சட்டத்தின் மதம் என்ற நிலைப்பாட்டை தாம் மதிப்பதாக அவர் தெரிவித்தார்.
‘எனது அரசியல் வாழ்க்கையில் இது போன்ற அவதூறு சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளது’ என அவர் சொன்னார்.
ஆகையால் ஆன்லைனில் வெளிவரும் பொறுப்பற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
மூசா ஹசானுக்கு எதிராக ஹன்னா இயோ தொடுத்த அவதூறு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular