
செப்பாங் டிச 26-
வர்த்தக விரிவாக்க யுக்தியாக புதிய விமானங்களை வாங்க கேப்பிட்டல் ஏ நிறுவனம் விவாதித்து வருகிறது.
நேற்று கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிறுவனத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
ஏர் ஆசியா நிறுவனத்தின் கீழ் அதன் விமான நடவடிக்கைகளுக்கான விரிவாக்க பல யுக்திகளை ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.
இதன் ஒரு பகுதியாக புதிய விமானங்களை வாங்குவதற்கு ஏர்பஸ், எம்ப்ரேயர் மட்டும் கோமாக் ஆகிய விமான உற்பத்தியாளர்களுடன் கேப்பிட்டல் ஏ நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
கேப்பிட்டல் ஏ நிறுவனம் அதிக விமானங்களை தேடுகிறது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். எனது குழு பிரேசிலுக்கும் மற்றொரு குழு கனடாவுக்கும் சென்று ஏ220 விமானங்களை பார்வையிட்டுள்ளது.
அதே போன்று சீனாவில் உள்ள கோமாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது எங்கள் நிறுவனத்திற்கு அதிக விமானங்கள் தேவைப்படுகிறது என்பதை காட்டுகிறது என்றார் அவர்.
எத்தனை புதிய விமானங்கள் வாங்க திட்டமிட்டுள்ளது என்பது இயக்குனர்கள் குழுவின் முடிவைப் பொறுத்தது.
ஆனால் கேப்பிட்டல் ஏ நிறுவனம் 100 விமானங்களை இலக்காக கொண்டுள்ளது.
ஒருவேளை இன்னும் அதிகமாக இருக்கலாம் என டான்ஸ்ரீ டோனி தெரிவித்தார்.


