
சுபாங் டிச 26
எதிர்வரும் மார்ச் 2025 முதல் சீனாவின் பெய்ஜிங் டாக்சிங் அனைத்துலக விமான நிலையம் மற்றும் சாங்ஷா ஹூவாங்குவா அனைத்துலக விமான நிலையத்திற்கு பாத்திக் ஏர் நேரடி விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.
சீனாவில் கால் பதிப்பை விஸ்தரிக்கும் மைல்கல்லாக இந்த புதிய விமான சேவைகள் அமைகிறது.
மலேசியா மற்றும் சீனாவிற்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை ஒழுகுப்படுத்தும் வகையில் இந்த புதிய விமான சேவை அமைகிறது.
சீனாவின் பெய்ஜிங் டாக்சிங் அனைத்துலக விமான நிலையத்திற்கு 21 மார்ச் 2025 முதல் விமான சேவை தொடங்குகிறது.புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை இந்த விமான சேவை மேற்கொள்ளப்படும்.
அதே வேளையில் 22 மார்ச் 2025ல் சாங்ஷா ஹூவாங்குவா அனைத்துலக விமான நிலையத்திற்கு தனது முதல் விமான சேவையை பாத்திக் ஏர் தொடங்குகிறது. திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் வாரத்திற்கு 4 நான்கு முறை இந்த விமான சேவை மேற்கொள்ளப்படும்.
பண்டைய பாரம்பரிய நகரமான பெய்ஜிங் நவீன புத்தாக்க நகரமாக துரிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த நகரை அனைவரும் அவசியம் சுற்றி பார்க்க வேண்டும்.

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் இங்குதான் உள்ளது.
பாரம்பரிய கலாச்சாரங்கள் மற்றும் வளங்கள் இங்குதான் உள்ளது. ஹூனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷா ஒரு அழகான மற்றும் அற்புதமான நகரமாகும்.
பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரங்களை கொண்ட ஒரு வளமான நகரமாகும். இங்குள்ள மலைப்பிரதேசங்கள் சுற்றுப்பயணிகளை மிகவும் கவரும்.
உணவு விரும்பிகளுக்கு இந்த நகரில் உள்ள ஹூனானின் காரமான உணவு வகைகள் ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கு இந்த நகர் ஒரு மையமாக இருப்பதோடு, துரித பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது.

இந்த இரண்டு புதிய நகரங்கள் சீனாவில் பாத்திக் ஏரின் 6வது மற்றும் 7ஆவது நகரங்களாகும். தற்போது செங்டு,குவாங்ஷாவ்,ஹய்காவ்,குன்மிங்,சாங்ஜி மற்றும் ஜாங்ஜாவ் ஆகிய நகர்களுக்கு விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே ஆசியா முழுதும் மக்கள், கலாச்சாரங்கள் மற்றும் வாய்ப்புகளை பெய்ஜிங் மற்றும் சங்ஷா முக்கிய நகர்கள் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையே கூடுதல் தொடர்பு மற்றும் பயண வாய்ப்புகளுக்கு இவ்விரு புதிய நகரங்களுக்கான விமான சேவை முக்கியமாக அமைவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்த இந்த புதிய விமான சேவைகள் தூண்டுகோலாக அமையும் என்றார் அவர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் 1.47 மில்லியன் சீன சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 2.82 மில்லியன் சீன சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த சுற்றுப்பயணிகள் கடந்த ஆண்டு மலேசிய பொருளாதாரத்திற்கு வெ 8.83 பில்லியன் பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
நாட்டின் சுற்றுலாத் துறையை வலுவடையச் செய்ய இன்னும் அதிகமான அனைத்துலக சுற்றுப்பயணிகளை கொண்டுவர இந்த இரண்டு புதிய விமான சேவை உறுதுணையாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இரண்டு புதிய விமான சேவை பாத்திக் ஏரின் புதிய விமான அத்தியாயமாகும். பிராந்திய தொடர்புகளை வலுப்படுத்துவதில் பாத்திக் ஏரின் வியூகத் திட்டங்களை வகுத்து வருவதாக டத்தோ சந்திரன் ராம மூர்த்தி குறிப்பிட்டார்.


