Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மடானி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்!

கோலா பிலா டிச 26
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் மீது இந்நாட்டு மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கூறினார்.
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக இந்த மடானி அரசாங்கம் உதயமானதாக அவர் குறிப்பிட்டார்.
மக்கள் வைத்துள்ள இந்த நம்பிக்கை தொடர்ந்து நீடித்தால் மட்டுமே ஒரு நிலைத்தன்மையான அரசாங்கம் செயல்பட முடியும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு கோலா பிலா வட்டாரத்தில் சுமார் 1,000 பேருக்கு 2025 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
குறிப்பாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மாநில மடானி அரசாங்கம் இம்மாநிலத்தில் உள்ள மக்கள் நிலை நோக்கம் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


இம்மாநில மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தங்களின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அந்த வகையில் இன்று வழங்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு காலண்டரில் 2 நாடாளுமன்ற மற்றும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.ஆகையால் மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உடனடியாக இந்த கை தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளிடம் முறையிடலாம் என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண தாங்கள் எப்பொழுதுமே தயாராக உள்ளதாக அவர் உறுதி அளித்தார்.
தங்களை நம்பி வாக்களித்த மக்களை மாநில மடானி அரசாங்கம் ஒரு பொழுது கைவிடாது என அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular