
வட தாய்லாந்தின் அழகிய நகரான சியாங் மாய் நீண்ட விடுமுறையில் செல்லும் சுற்றுப்பயணிகளுக்கு ஒரு அற்புதமான நகராகும்.
நீண்ட விடுமுறையில் செல்லும் சுற்றுப்பயணிகள் இங்கு மகிழ்ச்சியாக தங்களின் பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்த நகருக்கு குறுகிய விடுமுறைகள் சொல்லும் சுற்று பயணிகள், தங்களின் விடுமுறையை நீட்டிக்க தூண்டும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
காரணம் இந்த அழகிய நகரில் பல வகையான சிறப்பு அம்சங்கள் உள்ளன. சில மணி நேரங்களில் சமையலை கற்றுக் கொள்ளலாம்

இந்த நகரில் மற்றொரு சிறப்பு சமையல் கலை பள்ளியாகும். இங்கு பல சமையல் கலை பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.அனைத்துலக மற்றும் உள்ளூர் சுற்றுப்பயணிகள் எந்தவொரு சமையல் பள்ளியை தேர்வு செய்து சில மணி நேரங்களில் தாய்லாந்து சமையலை கற்றுக் கொள்ளலாம்.
இந்த வகையில் ஏர் ஆசியா அழைத்துச் சென்ற ஊடகவியலாளர்கள் மாமா நொய் தாய்லாந்து சமையல் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சமையல் பள்ளியில் 3 மணி நேரங்களில் மூன்று வகையான அறுசுவை தாய்லாந்து சமையல் கற்றுத் தரப்பட்டது.
இந்த தாய்லாந்து உணவுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் நுட்பங்கள் குறித்து சுருக்கமாக மற்றும் தெளிவாக கற்றுத் தரப்பட்டது.
தாங்கள் சமைத்த இந்த சமையலை தாங்களே உண்டு இவர்கள் மகிழ்ந்தனர்.
அதே வேளையில் இந்த நிகழ்வின் இறுதிக்கட்டத்தில் தாய்லாந்து சமையல் வழிகாட்டி புத்தகமும் இவர்களுக்கு வழங்கப்பட்டது.

சியாங் மாய் நகரில் இது ஒரு புகழ்பெற்ற அம்சம் என்று தான் கூற வேண்டும்.
அதிகமான அனைத்துலக சுற்றுப்பயணிகள் இந்த சமையல் பள்ளியில் கலந்து கொள்ள தவறுவதில்லை. சுற்றுப் பயணிகளுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாகும். இந்த நகரில் உள்ள டொய் இந்தானொன் தேசிய பூங்கா அதிகமான உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுப்பயணிகளை கவர்ந்து வருகிறது.
மலைப்பகுதியில் மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்கா மிக அழகாகவும் ரம்யமாகவும் காட்சி தருகிறது.
இந்த பூங்காவில் பல வகையான பல வண்ணங்களில் ஆயிரக்கணக்கான பூக்கள் நம் மனதை நெகிழ வைக்கிறது.

இந்த பூங்காவில் நுழைந்ததும் நமக்கு ஒரு வகையான மகிழ்ச்சியை தருகிறது.
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பூங்காவை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
சியாங் மாய் நகருக்கு வருகை புரியும் அனைத்துலக சுற்றுப்பயணிகள் இந்த அழகிய பூங்காவிற்கு வருகை புரிய தவறுவதில்லை.
இந்த பூங்காவில் சுற்றுச்சூழல், இயற்கை அழகு, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நமக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது.


