Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்!

புக்கிட் மெர்தாஜம் டிச 22
பல இனங்கள் வாழும் இந்நாட்டில் ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
அதே வேளையில் பல இன சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மை வலுபெற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு மைடின் பேரங்காடியில் நடைபெற்ற பல இனத்தவர் மற்றும் பாரம்பரியம் மீதான விழாவை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
பல இன சமூகத்தின் வலிமை என்ன என்பதற்கு மலேசியா ஒரு எடுத்துக்காட்டு என்றார் அவர்.
ஆகையால் இந்நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் இந்நாட்டில் பல்லின வலிமைதான் நமது சொத்துக்கள் என்று கூறிக் கொள்வதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கனவான மலேசியா மடானி கொள்கையை வெற்றியடை செய்வதில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு முழுமூச்சாக செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய ஒற்றுமை கொள்கையின் இலக்கை அடைவதில் தமது அமைச்சு பல திட்டங்களை வகுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.


இந்த இலக்கை அடைய தலைவர்கள், அரசாங்க நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என அவர் சொன்னார். இதனிடையே இதுபோன்று விழாக்கள் தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் ஆதரவில் நாடு தழுவிய நிலையில் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் பெர்லிஸ், அக்டோபர் மாதம் பேராக் ஆகிய மாநிலங்கள் நடைபெற்றதாக அவர் சொன்னார்.
மலேசியா சயாமியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular