
கோலாலம்பூர் டிச 22
தமது வாழ்நாள் முழுவதும் கல்வியை தொடர வேண்டும் என்ற மன உறுதியே இன்று ஒப்பனை துறையில் ஒரு முத்திரையை தாம் பதித்துள்ளதாக ‘கோலாலம்பூர் லுக்ஸ் செலூன்’ அழகு ஒப்பனை நிறுவனத்தின் இயக்குனர் மகேஸ்வரி ராஜாங்கம் கூறுகிறார்.

தொடர் கல்வி மற்றும் புதிய திறன்களை வளர்த்துக் கொள்வதின் மூலம் வெற்றியான மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை நம்மால் அடைய முடியும் என அவர் சொன்னார்.
எதிர்வரும் 2025 பிப்ரவரி மாதத்தில் திறப்பு விழா காணவிருக்கும் லுக்ஸ் செலூன் திருமதி மகேஸ்வரியின் மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
அழகு ஒப்பனையில் லுக்ஸ் செலூன் தரமான சேவையை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மலேசிய திறன் மேம்பாட்டு இலாகாவால் மதிப்பிடப்படும் மலேசிய திறன் மேம்பாட்டு சான்றிதழ் 1 மற்றும் 2 அடைவை தமது நிறுவனம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த அடைவை தமது நிறுவனம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கல்வி ஒரு தடை கல் அல்ல. மன உறுதி மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வலிமையே இந்த வெற்றிக்கு காரணம் என்றார் அவர்.
அழகு ஒப்பனை துறையில் லுக்ஸ் செலூன் ஒரு முத்திரையை பதிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அவர் குறிப்பிட்டார்.

பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தரமான சேவையை வழங்குவதே லுக்ஸ் செலூன் நிறுவனத்தில் பிரதான நோக்கம் என அவர் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக இளம் பெண்களுக்கு இந்த துறையில் அதிக வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கமாக இருந்து வருவதாக அவர் சொன்னார்.
சவால்களை சாதனையாக்க வேண்டும் என்பதே தமது நிறுவனத்தின் இலக்கு என மகேஸ்வரி தெரிவித்தார்.


