
ஜொகூர் பாரு டிச 16
ஜொகூர் ஐயப்பா தேவஸ்தானத்தின் கார்த்திகை மாத படி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஜொகூர் ஐயப்பா தேவஸ்தானத்தின் தலைவர் குருசாமி தலைமையில் இந்த படி பூஜை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜைக்கு மலேசிய இந்து ஆலய அமைப்புகளின் பேரவை தலைவர் டத்தோ ந. சிவக்குமார் சிறப்பு வருகை புரிந்தார்.

தேவஸ்தான தலைவர் குருசாமி டத்தோ சிவக்குமாருக்கு சிறப்பு செய்தார்.
இந்த பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த பூஜையை வெற்றியடைய செய்த அனைத்து பக்தர்களுக்கும் குருசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.


