
மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் டேவான் ஸ்ரீ பினாங்கு அரங்கில் ஜனவரி 4 & 5 நடைபெறும் 11 வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு உலகெங்கும் உள்ள வர்த்தகர்கள் பங்கேற்கும் குளோபல் கனெக்ட் கான்ஃபரன்ஸ் (Global Connect Conference) துவக்க விழாவிற்கு மலேசிய சிறுங் குறுந்தொழில் துணை அமைச்சர் டத்தோ ரமணன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள வர்த்தகர்கள், வர்த்தக ஆணையங்கள், சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்கள், சுய உதவிக் குழுக்கள் என தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அந்நிகழ்வில் மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம், மலேசிய பினாங்கு வர்த்தக சம்மேளனம், மலேசிய முஸ்லிம் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் தமிழக அரசு சிறுங் குறுந்தொழில் அமைச்சகம் மற்றும் மலேசிய SME Corp பங்கேற்க உள்ளன. இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உற்பத்தியாக்கும் பொருட்களை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்த அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் எந்த நாட்டில் தொழில் வாய்ப்புகள் பற்றியும், என்ன தொழில் செய்யலாம் எனவும், அடுத்த தலைமுறைக்கு தொழில் வாய்ப்புகள் பற்றியும், அரசாங்க மானியங்கள் பற்றியும், கடன்கள் பற்றியும் மாநாட்டில் கருத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மலேசிய மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் தொடங்க உள்ளவர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். தொடர்புக்கு +6016 616 77 08


