Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் 2024-2025 புதிர் போட்டி!

2024-2025 புதிர் போட்டியில் ஐந்தாவது அத்தியாயத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த புதிர் போட்டியில் இந்தியாவில் வாழாத இந்தியர்கள், இங்கு பூர்வீகர்கள் மற்றும் அந்நிய நாட்டவர்கள் பங்கு பெறலாம்.
இந்தியாவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் புதிர் போட்டி இந்திய வெளியுறவு அமைச்சின் முன்னெடுப்பு திட்டமாகும். இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இதர அம்சங்களை இவர்கள் ஆழமாக தெரிந்து கொள்ளும் நோக்கில் இந்த புதிர் போட்டி நடத்தப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் 13 ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாட்டத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பை தொடர்ந்து இந்த புதிர் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 2015,2018,2020,2022 ஆகிய ஆண்டுகளில் இந்த புதிர் போட்டி நடத்தப்பட்டு வந்துள்ளது.
11 டிசம்பர் 2024-குள் 14 மற்றும் 50 வயதை அடைந்தவர்கள் இந்த புதிர் போட்டியில் கலந்து கொள்ள கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்தப் பதிவுக்கான கட்டணம் இலவசமாகும்.
ww.bkjquiz.com இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பதிவுக்கான அனைத்து விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை இந்த இணையும் வழங்கும்.


11 நவம்பர் 2024 முதல் 11 டிசம்பர் 2024 ஆன்லைன் வழி இந்த புதிர் போட்டி நடைபெற்று வரும்.
14 முதல் 50 வயது உட்பட்டவர்களுக்கு இரண்டு பிரிவுகளாக இந்த புதிர் போட்டி நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 15 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த 30 வெற்றியாளர்களுக்கும் இந்தியாவை தெரிந்து கொள்ளுங்கள் என 2 வார சுற்றுலாவுக்கு தகுதி பெறுவார்கள். மேலும் 2025 ஆம் ஆண்டு ஜன 8-10 ஆம் தேதி புவனேஸ்வரில் நடைபெறும் 18 ஆவது பிரவாசி பாரதிய நிவாஸ் மாநாட்டில் பங்கு பெற இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular