Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஏர் ஆசியாவின் மற்றொரு சாதனை!15 நவம்பர் முதல் கிழக்கு ஆப்பிரிக்காவின் நைரோபிக்கு நேரடி விமான சேவை!


செப்பாங் நவ 12
உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, தற்போது ஆப்பிரிக்கா கண்டத்திற்கு தனது விமான சேவையை விஸ்தரிப்பு செய்துள்ளது.
இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 15 நவம்பர் 2024 முதல் கிழக்கு ஆப்பிரிக்கா கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு ஏர் ஆசியா விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.

கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இடைநில்லா ஏர் ஆசியாவின் இந்த விமான சேவையின் மூலம் சுமார் 10 மணி நேரங்களில் நைரோபி ஜோமோ கென்யாத்தா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்து விடலாம்.
ஆப்பிரிக்காவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் ஒன்றான நைரோபி, பல சிறப்பு அம்சங்களை கொண்ட நகராகும்.
இங்குள்ள நைரோபி தேசிய பூங்கா சிங்கங்கள், சிறுத்தைகள், ஒட்டகச்சிவிங்கிள், காண்டாமிருகங்கள், பறவைகள், விஷப் பாம்புகள் என வகையற்ற வனவிலங்குகளுக்கு புகலிடமாகும்.
நைரோபியில்
கென்யா சஃபாரி சுற்றுப்பயணங்கள் அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகமாக கவர்ந்து வருகிறது.
கோலாலம்பூர்-நைரோபிக்கு வாரத்திற்கு 4 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொள்ளவிருக்கிறது.

பல்வகை ஜீவராசிகளை எண்ணற்ற அளவில் கொண்ட நாடு தான் கென்யா. அங்குள்ள பல தேசிய பூங்காக்களும், விலங்குகளின் சரணாலையங்களும் ஆயிரமாயிரம் சுற்றுலா பயணிகளை ஒவ்வொரு வருடமும் கவர்ந்திழுக்கின்றன.
நைரோபி ஒரு புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. உலகிலேயே சில நகரங்களில் தான் விலங்குகள் மிக அருகில் சுற்றித் திரிவதை பார்க்க முடியும்.
நகரின் மையப் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருக்கும் ‘நைரோபி தேசிய பூங்கா’ சுற்றுலா பயணிகளின் புகலிடம் என்றே சொல்லலாம்.
இங்கு நைரோபியின் பூர்விகவாசிகளை நேருக்கு நேர் சந்திக்கலாம்.
இது மட்டுமின்றி இன்னும் பல சிறப்பு அம்சங்களை நைரோபி கொண்டுள்ளது.

ஏர் ஆசியாவின் இந்த இடைநில்லா நேரடி விமான சேவை மலேசிய சுற்றுப்பயணங்களில் மட்டுமின்றி அனைத்து உலகை சுற்றுப்பயணிகளை அதிகம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
கோலாலம்பூர்-நைரோபிக்கு வாரத்திற்கு 4 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொள்ளவிருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular