
கட்சிப் பொறுப்பாளர்களின் தவணைக் காலம் முடிவுற்றதும் பிகேஆர் தேர்தல் நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் பூஸியா சாலே கூறினார்.
கட்சியின் தலைமைத்துவ பொறுப்பாளர்களின் தவணைக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தவணைக் காலம் முடிந்ததும் எவ்வித தாமதம் இன்றி கட்சியின் தலைமைத்துவ தேர்தல் நடத்தப்படும் என உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவினர் துணையமைச்சருமான அவர் சொன்னார்.
இந்த நிலையில் கட்சியின் தலைமைத்துவ தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்ற கேள்விக்கு இடமில்லை என்றார் அவர்.
கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் நடத்த இறுதி காலம் மே 2025 என்பதால் கட்சித் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
கட்சியின் தலைவர் ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் தலைமைத்துவ கூட்டத்தில் கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.


