Monday, October 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அரசியல் நாடகமா? மக்கள் சேவையா? தனேந்திரனுக்கு பொது மக்கள் கண்டனம்!

கோலாலம்பூர் அக் 12

கோலாலம்பூர் மக்கள் சக்தி கட்சியின் 18வது பொதுப் பேரவையில் டத்தோ ஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தி எழுந்துள்ளது.

மலேசியாவின் மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் மற்றும் சில அரசியல் அமைப்புகளின்  விமர்சனங்கள் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்துள்ளது.

மக்கள் சக்தி கட்சியின் தீர்மானம் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 18வது பொதுப் பேரவையில் பாரிசான் நேஷனல் (Barisan Nasional)  கூட்டணி இந்த ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்  டத்தோ ஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன்  வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்குள் அம்னோ (UMNO)  தலைவர்களுக்கு உரிய பதவிகள்  அளிக்கப்படுவதில்லை என்பதே இவர்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் பெரிக்காத்தான் நேஷனல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சம்பளம் வாங்காமல் பணியாற்றுவது முதல் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் வரை பல விஷயங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன குறிப்பாக மேடைகளில் முன்வைக்கப்படும் தனிப்பட்ட விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமரின் பதிலடி இந்த விமர்சகர்களுக்குப் பதில் அளித்த பிரதமர் அன்வர் இப்ராஹிம் சம்பளம் வாங்கவில்லை என்றால் கோவப்படுவார்கள் “நாட்டின் சொத்துக்களைச்  சூறையாடியவர்களைப் பற்றி பேச மறப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது அரசாங்கம் இனப்பாகுபாடின்றி தேவையின் அடிப்படையில் மட்டுமே நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வீண் பேச்சுகளும்  மக்கள் ஏமாற்றமும் மக்களுக்காக போராடுவதாகக் கூறிக்கொண்ட தனேந்திரன் உண்மையில் இந்தியச் சமுதாயத்திற்காக உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது “வாக்குறுதிகள் போதும் செயலில் காட்டுங்கள்” என மக்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தாளித்து வருகின்றனர்.

அரசியல் ஆதாயத்துக்காக  பரிசான் பெயரா? என்ற கூட்டணியின் ஒரு அங்கமாகக் கூட இல்லாத ஒரு சிறு கட்சியின் தலைவர் அக்கூட்டணிக்கு உத்தரவு பிறப்பித்தது வேடிக்கையாக இருப்பதாக அரசியல் வாதிகள் விமர்சிக்கின்றனர்.

தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே இத்தகைய அதிரடித் தீர்மானங்களை அவர் நிறைவேற்றுவதற்காகக் குற்றம் சாட்டப்படுகிறது.

ஒரு தலைவரிடம் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளான நேர்மையும் நம்பகத்தன்மையும் தனேந்திரனிடம் எந்த அளவிற்கு காணப்படுகின்றன? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு தலைவரின் உண்மையான மதிப்பு அவரது வார்த்தைகளில் மட்டுமல்ல, செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையிலும் பிரதிபலிக்க வேண்டும்.

சுயநல அரசியலை விட்டு விட்டு, உண்மையாவே மக்களின் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இனி வரும் காலங்களில் வீண் பேச்சுகளை தவிர்த்து உண்மையான மக்கள் தொண்டில் ஈடுபட்டால் தனேந்திரன் போன்ற தலைவர்களை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கமாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

“மக்கள் சேவையே அரசியலின் உண்மையான அடையாளம். மக்களின் நம்பிக்கையைப் பெறுவது மட்டுமல்லாமல், அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வதே ஒரு தலைவரின் மிகப்பெரிய பொறுப்பாகும். மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் நலனுக்காக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவதே உண்மையான தலைமைத்துவத்தின் அடையாளம். இறுதியில், ஒரு தலைவரின் வார்த்தைகளைவிட அவரது செயல்களே அவரது தலைமைத்துவத்தைப் பறைசாற்றும். அந்தச் செயல்களை மதிப்பீடு செய்து, இறுதித் தீர்ப்பை வழங்குவது மக்களே!” என மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா” ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு அவர்கள் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular