
கோலாலம்பூர், அக். 19
மலேசியாவுக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சோம்நாத் கோஷ், இன்று (அக். 19) இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வின்போது, இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் மக்களின் அன்பான வாழ்த்துகளை மலேசிய மாமன்னரிடம் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா – மலேசியா இடையிலான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை (Comprehensive Strategic Partnership) மேலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.



